தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ஆற்று மணல் திருடிய 3 பேர் கைது

தூத்துக்குடி: கலைஞானபுரம் விலக்குப் பகுதியில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் கடத்திய மூன்று பேரை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மூன்று பேர் கைது
மூன்று பேர் கைது

By

Published : Jun 29, 2021, 10:07 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கிழக்குக் கடற்கரைச் சாலை அருகே உள்ள கலைஞானபுரம் விலக்குப் பகுதியில் திருட்டுத்தனமாக ஆற்று மணல் அள்ளுவதாகக் காவல் துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அத்தகவலின்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மணல் கடத்தலில் ஈடுபடுபவர்களைக் கைதுசெய்து, உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்பேரில் விளாத்திகுளம் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது, சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (54), ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிண்டுரானா (30), ராஜ்குமார் (54) ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்களைக் கைதுசெய்த காவல் துறையினர் நான்கு யூனிட் மணல், மணல் திருடுவதற்குப் பயன்படுத்திய இரண்டு லாரிகள், ஹிட்டாச்சி இயந்திரம் ஆகியவற்றைப் பறிமுதல்செய்தனர்.

இச்சம்பவம் குறித்து குளத்தூர் காவல் நிலைய பொறுப்பு ஆய்வாளர் கலா, வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்.

இதையும் படிங்க:சிவகளை அகழாய்வு: ஒரே குழியில் 16 முதுமக்கள் தாழிகள் கண்டெடுப்பு!

ABOUT THE AUTHOR

...view details