தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்தவர் சரவணன் என்ற ஜிந்தா சரவணன். இவரது வீட்டிற்குள் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி நுழைந்த அடையாளம் தெரியாத கும்பல் அவரை அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. தகவலறிந்து வந்த காவல் துறையினர் சரவணனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த கொலை சம்பவம் தொடர்பாக தூத்துக்குடி ஆரோக்கியபுரத்தைச் சேர்ந்த வடிவேல், தாளமுத்து நகரைச் சேர்ந்த முனியசாமி, பூபால்ராயர்புரத்தைச் சேர்ந்த ஜான்சன் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொலை குற்றவாளிகள் மீது பாய்ந்தது குண்டர் தடுப்பு சட்டம் - குற்றவாளிகள் மீது குண்டாஸ்
தூத்துக்குடி: இளைஞர் கொலை வழக்கில் தொடர்புடைய மூன்று பேரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
குண்டர் தடுப்பு சட்டம்
இந்நிலையில் விசாரணையில் கைதான மூன்று பேர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய அனுமதிக்குமாறு தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெய்பிரகாஷ், மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு அறிக்கை தாக்கல் செய்தார். அறிக்கையை ஆய்வு செய்த காவல் கண்காணிப்பாளர் மூன்றுபேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து அவர்களை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.