தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் கஞ்சா வியாபாரிகள் மூவர் கைது! - தூத்துக்குடியில் கஞ்சா விற்பனை

தூத்துக்குடி : மாநகரப் பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த ஒரு பெண் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் பிரபல கஞ்சா வியாபாரி உட்பட மூவர் கைது
தூத்துக்குடியில் பிரபல கஞ்சா வியாபாரி உட்பட மூவர் கைது

By

Published : Sep 11, 2020, 5:25 PM IST

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் கஞ்சா வியாபாரம் நடப்பதாகவும் இதனால் குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் மாவட்டக் காவல் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவின் பேரில், மாநகரக் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் மேற்பார்வையில், ஆய்வாளர் ஜெயந்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைபெற்று வந்தது.

இந்நிலையில் டி.சவேரியார்புரம் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த லதா என்ற பெண்ணைப் பிடித்து விசாரணை செய்ததில், அவர் அப்பகுதியிலுள்ள பிரபல கஞ்சா வியாபாரி என்பது தெரிய வந்தது.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். மேலும், அவரிடமிருந்து 4.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த காவல் துறையினர் லதாவிற்கு உடந்தையாக இருந்த ராஜா, சோலையப்பன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

இதையும் படிங்க: காதல் மனைவி மூன்றாம் நாள் பிரிவு: காதல் கணவர் தற்கொலை

ABOUT THE AUTHOR

...view details