தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பீடி இலை கடத்திய 3 பேர் கைது! - Three arrested for smuggling beedi leaf in thoothukudi

தூத்துக்குடி: இலங்கைக்கு படகு மூலம் 1,000 கிலோ பீடி இலையை கடத்திச் சென்ற மூவரை இலங்கை கடற்படையினர் கைது செய்து படகையும் பறிமுதல் செய்தனர்.

fisherman arrested

By

Published : Nov 14, 2019, 7:45 PM IST

தூத்துக்குடி மாவட்டம் தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் அலங்கார சாக்ரட்டீஸ் (26). கடந்த 11ஆம் தேதி அதிகாலை இவருக்கு சொந்தமான TN_l2 MO 1579 என்ற படகில் மீன் பிடிக்க செல்வதாகக் கூறி தனது நண்பர்களான அந்தோனி சேவியர் (28), முருகேசன் தினேஷ் (26) ஆகியோருடன் கடலுக்குச் சென்றுள்ளனர்.

இந்நிலையில், 12ஆம் தேதி இலங்கை கடலோர காவல்படையினர் கப்பல் ரோந்து பணியில் ஈடுபட்டபோது கடல் எல்லைக்குள் சந்தேகப்படும்படியாக சென்ற படகை நிறுத்தி சோதனை செய்தனர்.

அப்போது, படகில் சுமார் 1,000 கிலோ பீடி இலையை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, படகையும், பீடி இலையையும் பறிமுதல் செய்து சாக்ரட்டீஸ் உள்பட மூவரையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

கடற்படையினாரால் பறிமுதல் செய்யப்பட்ட படகு

அதன்பின், கைது செய்யப்பட்ட மூவரையும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலையையும் இலங்கை கடற்படையினர், கொழும்பு சுங்க இலாகா அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். மேலும் படகை இலங்கை கடலோர காவல் படையினர் மேல்விசாரணைக்காக கொண்டு சென்றனர்.

இதையும் படிங்க: துபாயிலிருந்து ஈரான் நாட்டு குங்குமப் பூக்களை கடத்தி வந்தவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details