தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் தேர்வு செய்யப்பட்ட 22 உறுப்பினர்களும், ஊராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள சேவை மையத்தில் நடைபெற்றது. ஓட்டப்பிடாரம் யூனியனில் திமுக 12, அதிமுக 6, காங்கிரஸ் 1, சி.பி.எம் 2, சுயேச்சை 1 என்ற அளவில் உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.
ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றித் தலைவர் தேர்தலில் திமுகவை சேர்ந்த ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையாவின் மருமகன் ரமேஷ், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் காசி விஸ்வநாதன் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் திமுகவுடன், அதிமுகவும் மறைமுக கூட்டணி அமைத்தது. முதலில் திமுகவின் காசி விஸ்வநாதன் தன்னுடன் தேர்வுசெய்யப்பட்ட 11 பேருடன் வந்தார்.