கரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் மக்கள் சுய ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுவதையொட்டி திருச்செந்தூரில் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகமும் வெறிச்சோடியுள்ளது. மேலும், சுய ஊரடங்கு காரணமாக திருச்செந்தூரின் பிரதான சாலைகள் போக்குவரத்து நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
சுற்றுலா பயணிகளின்றி வெறிச்சோடிய திருச்செந்தூர் முருகன் கோயில் - தூத்துக்குடி திருச்செந்தூர் முருகன் கோவில்
தூத்துக்குடி: மக்கள் ஊரடங்கு உத்தரவு எதிரொலியாக சுற்றுலா பயணிகளின்றி திருச்செந்தூர் முருகன் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது.
thoothukudi-thiruchendur-murugan-temple
மேலும், உலகப் புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு மார்ச் 31ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளதால், திருக்கோயில் வளாகமும் வெறிச்சோடி காணப்பட்டது.
இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு உதவிக்கரம் நீட்டிய திமுக!