உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சியை பொறுத்தமட்டில், மாநகராட்சி அலுவலகம் அருகேயுள்ள காமராஜர் காய்கறி மார்க்கெட் மிகவும் குறுகலான பகுதியில் செயல்பட்டு வந்தது.
இந்த காய்கறி மார்க்கெட்டில் பொதுமக்கள் அதிக அளவில் கூடுவதால் தொற்று நோய் அபாயம் ஏற்படலாம் என்று கருதி மாநகராட்சி நிர்வாகம் காய்கறி மார்க்கெட்டை இன்று முதல் பழைய பேருந்து நிலைய வளாகத்திற்கு மாற்றியுள்ளது.
மிகவும் விரிவான இடப்பகுதி என்பதால் ஏராளமானவர்கள் ஒரே நேரத்தில் காய்கறி வாங்கிச் சொல்ல இது வசதியாக உள்ளது. மேலும், ஒவ்வொருவரும் ஒரு மீட்டர் இடைவெளியில் நின்று பொருட்களை வாங்கிச் செல்லும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டுள்ளன.
தூத்துக்குடி பேருந்து நிலையம் காய்கறி சந்தையாக மாற்றம் காய்கறி வாங்க வருபவர்கள் முகக் கவசம் அணிந்து வந்தால் மட்டுமே காய்கறி வாங்க அனுமதிக்கப்படுகின்றனர். மேலும், மாநகராட்சி ஊழியர்கள் தற்காலிக காய்கறி மார்க்கெட்டாக மாற்றப்பட்டுள்ள பழைய பேருந்து நிலைய வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:மக்கள் ஒத்துழைப்புதான் அரசின் எதிர்பார்ப்பு: அமைச்சர் கடம்பூர் ராஜூ