தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள குளத்தூள்வாய்பட்டி கிராமத்தில் அரசு நிலங்களைச் சில நபர்கள் சட்டவிரோதமாக இலவச பட்டாவாகப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட இலவச பட்டாவை ரத்துசெய்யக் கோரியும், அந்தப் பட்டாவை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கக் கோரியும் தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தலையில் முக்காடு போட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ் விவசாயிகள் சங்கத்தினர் போராட்டம் தலைவர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர். தொடர்ந்து அவர்கள் கோட்டாட்சியர் விஜயாவிடம் இது குறித்த கோரிக்கை மனுவை கொடுத்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட விஜயா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க: போலி பட்டா தயாரித்து மோசடி - எம்.எல்.ஏ., சகோதரர்கள் பெண்ணிற்கு கொலை மிரட்டல்