தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படுகிறது. தூத்துக்குடியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, ஊரடங்கு உத்தரவை மீறி வாகனங்களில் சுற்றித்திரிந்த நபர்களை அவர் எச்சரித்து அனுப்பினர். இதன்பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்கும் பொருட்டு மாவட்டத்தில் இன்று 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தூத்துக்குடி எஸ்பி ஜெயக்குமார் ஊரடங்கு உத்தரவை மீறி தேவையில்லாமல் வெளியே சுற்றினால் வாகனம் பறிமுதல் செய்தல் உள்ளிட்ட கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாளை ஆடி அமாவாசையையொட்டி கடற்கரையில் 5 நபர்களுக்கு மேல் கூடக் கூடாது. இதுவரை ஊரடங்கு உத்தரவை மீறியதாக சுமார் 3,600 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
காவல் துறையில் கரோனா தொற்றைக் கட்டுபடுத்த தகுந்த அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. சாத்தான்குளம் தந்தை-மகன் சம்பவத்தில் சிபிஐ விசாரணை நடத்திவருகிறது. மற்ற புகார்கள் மீது காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது. இதில் காவல் துறையைச் சேர்ந்தவர்கள் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இதையும் படிங்க:சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு - சிறையில் சிபிஜ தீவிர விசாரணை