தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூய பனிமய மாதா பேராலய ஆண்டு பெருவிழா - பக்தர்கள் ஏமாற்றம்

தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 439ஆம் ஆண்டு பெருவிழா இந்த ஆண்டும் பக்தர்கள் பங்கேற்பின்றி கொண்டாடப்பட்டது.

Thoothukudi snows lady feast
Thoothukudi snows lady feast

By

Published : Aug 5, 2021, 12:20 PM IST

தூத்துக்குடி : திருவிழாவாக கொண்டாடப்படும் பனிமய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா பொதுமக்கள் பங்கேற்பின்றி கடந்த ஜூலை 26ஆம் தேதி அன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் ஜெபமாலை, மறையுரை, திருப்பலி நடைபெற்ற நிலையில் ஆண்டு பெருவிழாவின் நிறைவு நாளான இன்று (ஆக.5) கரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஆடம்பர கூட்டு திருப்பலி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் நடைபெற்றது.

தொடர்ந்து ஆலய பங்குத்தந்தை குமார் ராஜா மறையுரை நிகழ்த்தினார். ஆலய நிகழ்ச்சிகளில் மறைமாவட்ட முதன்மை குரு, பங்குத்தந்தைகள், கன்னியாஸ்திரிகள் மட்டுமே கலந்துகொண்டனர். திருவிழா நாள்களில் தினந்தோறும் சிறப்பு வழிபாடும், திருப்பலியும் நடைபெற்றது. பேராலய திருவிழாவின் சிறப்பு திருப்பலி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளும் உள்ளூர் தொலைக்காட்சியிலும், யூடியூப்பிலும் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

சப்பர பவனி ரத்து

பெருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று(ஆக.5) மாலை நடைபெறும் பொன் மகுடம் தரித்த தூய பனிமய மாதாவின் திருவுருவ சப்பர பவனி கரோனா தொற்று வழிகாட்டு நெறிமுறைகள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆலய நிகழ்ச்சிகளில் பக்தர்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக நகரக் காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில் ஆலய வளாகத்தை சுற்றிலும் 400க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

பக்தர்கள் ஏமாற்றம்
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தைப் பொறுத்தமட்டில் இத்திருவிழாவில் கத்தோலிக்க கிறிஸ்தவ மக்கள் மட்டுமல்லாது இந்து, இஸ்லாமியப் பெருமக்களும் தூத்துக்குடி பனிமய மாதா பேராலய திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பிப்பது வழக்கம்.‌ மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த திருவிழா இந்த ஆண்டு பக்தர்கள் பங்கேற்பின்றி நிறைவடைந்தது சற்று ஏமாற்றத்தை அளித்தது.

இதையும் படிங்க: தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ABOUT THE AUTHOR

...view details