தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பிரதமர் மோடியின் ஊரடங்கு வேண்டுகோள் - திருமணம் ஒத்திவைப்பு

தூத்துக்குடி: பிரதமர் மோடியின் மக்கள் ஊரடங்கு வேண்டுகோளை ஏற்று தூத்துக்குடியில் நாளை நடைபெறவிருந்த திருமணம் வேறு ஒத்திவைக்கப்பட்டது.

தூத்துக்குடியில் திருமணம் தள்ளிவைப்பு
தூத்துக்குடியில் திருமணம் தள்ளிவைப்பு

By

Published : Mar 21, 2020, 6:42 PM IST

இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் இந்தியாவில் கரோனா வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு நாளை ஞாயிற்றுக்கிழமை சுய ஊரடங்கு உத்தரவுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த பிரபல நிதி நிறுவன தொழிலதிபர் சண்முக சுந்தரம் என்பவரின் மகள் கிருஷ்ண பிரியாவுக்கும், திருநெல்வேலியைச் சேர்ந்த பகவதி என்பவருக்கும் நாளை அழகர் திருமண மஹாலில் வைத்து திருமணம் நடத்த திட்டமிட்டிருந்தனர். பிரதமர் மோடி சுய ஊரடங்கு உத்தரவுக்கு உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்ததற்கு இணங்க சண்முகசுந்தரம் தனது மகள் திருமணத்தை நாளை மறுநாள் திங்கட்கிழமைக்கு மாற்றியுள்ளார்.

தூத்துக்குடியில் திருமணம் தள்ளிவைப்பு

இதுகுறித்து சண்முகசுந்தரம் நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் கூறும்போது, "தேசத்தின் நலனுக்காக பிரதமர் மோடி அறிவித்துள்ள இந்த முடிவை வரவேற்றும், அனைவரும் கரோனா நோய் குறித்த விழிப்புணர்வு அடைய வேண்டும் என்பதற்காகவும் எனது மகளின் திருமணத்தை ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக திங்கள்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளோம்" என்றார்.

இதையும் படிங்க: 'நோயற்ற வாழ்வே, குறைவற்ற செல்வம் என்பதை உணர்த்தும் நேரம் இது' - கமல் அறிவுறுத்தல்

ABOUT THE AUTHOR

...view details