தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஸ்டாலின் காலனி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியம்மாள் (50). நகராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த இவருக்கு கடந்த ஐந்து நாளுக்கு முன்பு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
அதைத் தொடர்ந்து அவர் இருக்கும் பகுதியான ஸ்டாலின் காலனி பகுதியைச் சுகாதாரத் துறையினர், வருவாய் துறையினர், காவல் துறையினர் நோய் கட்டுப்பாட்டு பகுதியாக அறிவித்து தடுப்புகளை அமைத்துள்ளனர். அங்கு வாழும் 70 குடும்பங்களைச் சேர்ந்த 249 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் பாண்டியம்மாள் உறவினர்கள் மூன்று பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டு அவர்களும் அதே தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெறுகின்றனர்.