தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள அய்யனேரி தெற்கு காலனியைச் சேர்ந்தவர், அய்யாதுரை. இவர் தனது மகள் பழனிசெல்வியுடன் இருசக்கர வாகனத்தில் அய்யனேரியிலிருந்து முடுக்கலான்குளம் கிராமத்திற்குச் சென்றுகொண்டிருந்தார்.
ஜி.வி.என் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்தபோது, பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று, இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இவ்விபத்தில் தூக்கி வீசப்பட்ட அய்யாதுரையும், பழனிசெல்வியும் கீழே விழுந்து பலத்த காயமடைந்தனர்.
உடனே அவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தகவலறிந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.