தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஸ்டெர்லைட் ஆலையை திறக்காவிட்டால் தொடர் உண்ணாவிரத போராட்டம் - தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார சங்கம் அறிவிப்பு! - sterlite

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வலியுறுத்தி பல்வேறு கிராமங்களில் கையேந்தி தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த போவதாக தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார பாதுகாப்பு சங்கம் அறிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்
ஸ்டெர்லைட் ஆலையை திறக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்

By

Published : Jun 21, 2022, 1:18 PM IST

Updated : Jun 21, 2022, 1:45 PM IST

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை விற்பனை செய்ய போவதாக வேதாந்தா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆலையை வாங்க விருப்பமுள்ளோர் ஜூலை 4ஆம் தேதி மாலை 6 மணிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில் ஸ்டெர்லைட் ஆலை ஆதரவாளர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, துளசி அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் தனலெட்சுமி கூறுகையில், தூத்துக்குடி வளர்ச்சி பெற வேண்டும் என்றால் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட வேண்டும். மக்களிடடையே ஆலைக்கு எதிராக எதிர்ப்பு பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆலைக்கு மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆலையை மூடும் பட்சத்தில் தூத்துக்குடி வளர்ச்சி பெறாது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை வேண்டும் என்பதே அனைத்து வியாபாரிகளின் விருப்பமாகும் என்றார்.

அரசு மது ஆலைகளை மூட சொல்லி போராளிகள் போராட வேண்டியது தானே ஏன் போராடவில்லை என கேள்வியுழுப்பிய அவர், தமிழ்நாடு அரசு 6 வருடங்களாக எந்த ஒரு தொண்டு நிறுவனங்களுக்கும் உதவி செய்யவில்லை. ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே பெண்களுக்கு பல்வேறு உதவிகள் செய்து வருகிறது. ஆகையால் ஆலையை மூடும் பட்சத்தில் கிராம மக்கள், பெண்கள் என அனைவரும் ஒன்று சேர்ந்து மிக பெரிய அளவில் பட்டினி போராட்டம், மனித சங்கிலி போராட்டம் நடத்துவோம் என கூறினார்.

தூத்துக்குடி மக்கள் வாழ்வாதார சங்க செயலாளர் கணேசன் கூறுகையில், ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு பல்லாயிரம் மக்கள் வாழ்வாதாரம் இழந்துள்ளனர். ஆதலால் தமிழ்நாடு அரசு நிபுணர் மதிப்பிட்டு குழு அமைத்து ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராளிகள் சொல்ல கூடிய ஒவ்வொரு குற்றச்சாட்டும் உண்மையா என ஒரு மாத காலத்திற்குள் அறிக்கை தயார் செய்து ஆலையை திறக்க வேண்டும் என கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்காவிட்டால் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும்

தூத்துக்குடி மாவட்ட தொண்டு நிறுவன கூட்டமைப்பின் தலைவர் தாமோதரன் கூறுகையில், ஸ்டெர்லைட் நிறுவனர் அனில் அகர்வால் ஒரு மாதம் பொறுத்துக் கொள்ள வேண்டும். அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்க வேண்டாம், ஸ்டெர்லைட் நிறுவனம் தங்களது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். 25 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எதிர்ப்பாளர்களின் நோக்கம் நாட்டின் பொருளாதாரத்தை, வேலைவாய்ப்பை முடக்குவது மட்டுமே, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு ஒரு அழுத்தத்தைக் கொடுத்து ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்றார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி சமூக ஆர்வலர்கள், சுற்று சூழல் ஆர்வலர்கள், சுய உதவி குழு தொண்டு நிறுவன அமைப்புகள் ஒன்று சேர்ந்து பல்வேறு கிராமங்களில் கையேந்தி தொடர் போராட்டம் நடத்துவோம். அரசு அனுமதி கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் எங்களது போராட்டம் தொடரும் என்று கூறினார்.

இதையும் படிங்க:தூத்துக்குடியில் நர்சிங் மாணவி ஆசிட் குடித்து தற்கொலை

Last Updated : Jun 21, 2022, 1:45 PM IST

ABOUT THE AUTHOR

...view details