தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மத்திய பட்ஜெட் அறிவிப்புகளால் பொது மக்கள் மகிழ்ச்சி!

தூத்துக்குடி: மத்திய அரசின் 2020-21 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் உள்ளதாக தூத்துக்குடி வர்த்தகர்கள் பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

budget reaction byte 2020-2021Publice Budget Reaction Thoothukudi People Budget Reaction பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து தூத்துக்குடி பட்ஜெட் குறித்து பொதுமக்கள் கருத்து
2020-2021Publice Budget Reaction

By

Published : Feb 1, 2020, 3:01 PM IST

மத்திய அரசின் 2020-21 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பாராளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வாசித்தார். "பூமியை திருத்தி உண்" எனும் ஆத்திச்சூடி பாடலை மேற்கோள் காட்டி பட்ஜெட்டை வாசிக்கத் தொடங்கினார்.

மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு வாசிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையில் பல்வேறு முக்கிய அம்சங்கள் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. மத்திய அரசின் இந்த பட்ஜெட் அறிவிப்பு குறித்து தூத்துக்குடி வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், ”மத்திய அரசின் 2020-21ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை மிகவும் வரவேற்கக் கூடியதாக உள்ளது.

குறிப்பாக வருமான வரி வரம்பில் 5 லட்சம் முதல் 7 லட்சம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீத வருமான வரியும், ஏழரை லட்சம் முதல் 10 லட்சம் வரை உள்ளவர்களுக்கு 15 சதவீத வருமான வரியும் அளித்திருப்பது புதிய வரவாகும். இந்த வரைவின் படி நடுநிலை குடும்பத்தார்கள் மற்றும் மாத சம்பளம் ஈட்டுவோர் மிக்க மகிழ்ச்சி அடைவர்.

அதுபோல படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கும் பொறியியல் பட்டதாரிகளுக்கும் ஊரகப் பகுதிகளில் இன்டர்ன்ஷிப் எனப்படும் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தரும். இதுபோக முன் அனுபவத்தை தரும் என்பதால் மத்திய அரசின் பட்ஜெட் வரவேற்கக்கூடிய அம்சமாகும் ”என்றனர்.

பட்ஜெட் குறித்து பொதுமக்கள், வர்த்தர்கள் கருத்து

பட்ஜெட் குறித்து தொழிலதிபர் ஜெயக்குமார் கூறுகையில், "இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் வேளாண்மைக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து இருப்பது வரவேற்கக் கூடியது. வேளாண்மைக்காக 2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதுபோல் நாட்டில் தனியார் பங்களிப்புடன் மருத்துவமனைகள் கட்டப்படும் எனவும், திறன் மேம்பாட்டுக்காக 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் என்ற அறிவிப்பும், விவசாயிகளின் நலனுக்காக தனி அறைகள், குளிரூட்டப்பட்ட ரயில்கள் இயக்கப்படும் என அறிவித்திருப்பதும் வரவேற்க கூடியது.

முக்கியமாக தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரில் மத்திய அரசின் தொல்பொருள் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு உலகத் தமிழர்களை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது மொத்தத்தில் மத்திய அரசின் இந்த நிதிநிலை பட்ஜெட் மகிழ்ச்சிகரமான அறிவிப்புகள் நிறைந்த பட்ஜெட்டாக உள்ளது” என கூறினார்.

இதையும் படிங்க:

இன்று பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் நிர்மலா சீதாராமன்

ABOUT THE AUTHOR

...view details