தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் பனிமயமாதா பேராலய 10ஆவது நாள் திருவிழா - மாதா

தூத்துக்குடி: பனிமயமாதா பேராலய திருவிழாவின் 10ஆவது நாள் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

பனிமயமாதா பேராலயம்

By

Published : Aug 5, 2019, 11:55 AM IST

Updated : Aug 5, 2019, 12:56 PM IST

தூத்துக்குடியில் உலக பிரசித்திப் பெற்ற பனிமயமாதா ஆலயத்தின் 437வது ஆண்டு திருவிழா, ஜூலை மாதம் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் கிறிஸ்துவ மக்கள் மட்டுமின்றி இந்துக்கள், இஸ்லாமிய பெருமக்களும் திரளாக கலந்து கொண்டு விழாவைச் சிறப்பிப்பது வழக்கம்.

இத்திருவிழாவின் 9ஆவது நாளின் முக்கிய நிகழ்ச்சியான சொரூப சப்பர பவனி, ஆலயவளாகத்திற்குள் சுற்றிவரும் நிகழ்ச்சி நேற்று மாலை நடைபெற்றது. திருவிழாவின் 10ஆவது நாளான இன்று, சிறப்புக் கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து இன்று மாலை 7 மணியளவில் பனிமயமாதா சொரூபம் அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தில் வைக்கப்பட்டு தூத்துக்குடி நகரில் உள்ள வீதிகளில் உலா வரும் சப்பரபவனி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தூத்துக்குடியில் பனிமயமாதா பேரால திருவிழா

பனிமயமாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி நகரமே விழாக்கோலம் கொண்டுள்ளது. இதனால் தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் கலந்துகொள்வதற்காக பலர் வெளியூர்களிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வந்துள்ளனர்.

Last Updated : Aug 5, 2019, 12:56 PM IST

ABOUT THE AUTHOR

...view details