தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக மற்றும் கற்பக விநாயகா பல் மருத்துவக் கல்லூரி காஞ்சிபுரம், அரவிந்த் கண் மருத்துவமனை நெல்லை, அப்பல்லோ மருத்துவமனை மதுரை ஆகியவை இணைந்து நடத்தும் சிறப்பு பல்நோக்கு மருத்துவ முகாம், தூத்துக்குடி திருச்செந்தூர் சாலையிலுள்ள அன்னம்மாள் கல்லூரியில் இன்று தொடங்கி இரண்டு நாட்கள் நடைபெறுகிறது.
இந்த மருத்துவ முகாமை தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி தொடங்கிவைத்தார். தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக வந்திருந்த நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.
பல் மருத்துவ முகாமில் பல் எடுத்தல், பல் கட்டுதல், பல் சொத்தை நீக்குதல் மற்றும் பல் சம்பந்தப்பட்ட அனைத்து விதமான நோய்களுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் நாளை பொது மருத்துவ முகாம் நடைபெறுகிறது.
இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்த கனிமொழி எம்.பி இதில் பொது மருத்துவம், இதய நோய், இசிஜி, ஸ்கேன் மற்றும் புற்றுநோய் மருத்துவ நிபுணர்கள் கலந்துகொண்டு இலவசமாக சிகிச்சை அளிக்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன், மாவட்ட குழு நிர்வாகிகள் ஜெகன் உட்பட பலர் இருந்தனர்.
இதையும் படிங்க: உள்ளாட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் அதிமுக செயற்குழு நாளை கூடுகிறது