தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா ஜன.15ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவப் பொங்கல் விழா களைகட்டியுள்ளது. அதன் ஒருபகுதியாக, தூத்துக்குடி வ.உ.சி. கல்வியியல் கல்லூரி மாணவ, மாணவிகள் சமத்துவப் பொங்கல் வைத்துக் கொண்டாடினர்.
இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சமத்துவப் பொங்கல் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதையடுத்து அவர் மாற்றுத்திறனாளிகள் சிறப்புப் பள்ளிக்குச் சென்று அங்குள்ள மாணவர்களுடன் கலந்துரையாடினார்.