தூத்துக்குடி:மாவில்பட்டி ஊராட்சியை சேர்ந்தவர் மாரீஸ்வரி. இவர் சாத்தூரில் தையல் பயிற்சிக்கு சென்ற போது, அதே பகுதியை சேர்ந்த அழகுராஜ் உடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அழகுராஜ் விளாத்திகுளத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது.
இந்நிலையில், தான் வேலை பார்க்கும் நிறுவனத்தில், மாரீஸ்வரியை வேலைக்கு சேர்த்துள்ளார். தொடர்ந்து மாரீஸ்வரியை திருமணம் செய்துகொள்வதாக கூறிய அழகுராஜ் அவரது வீட்டிற்கு அடிக்கடி அழைத்துச் சென்றுள்ளார். மேலும் ஆசை வார்த்தைக் கூறி அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கருவுற்ற மாரீஸ்வரி, அழகுராஜிடம் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அழகுராஜ் மறுப்பு தெரிவித்தால், மாரீஸ்வரி கடந்த 2015 ஆம் ஆண்டு மகளிர் காவல் நிலையத்தில் அழகுராஜ் மீது புகார் அளித்தார்.