தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தொழிலாளர் நலவாரியத்தைக் கண்டித்து தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம் - Thoothukudi Latest News

தூத்துக்குடி: கரோனா நிவாரண நிதியை வழங்காமல் தொழிலாளர்களை அலைக்கழிக்கும் தொழிலாளர் நலவாரியத்தைக் கண்டித்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Thoothukudi Labours association protest
Thoothukudi Labours association protest

By

Published : Jun 16, 2020, 8:44 AM IST

தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியம், உடலுழைப்பு தொழிலாளர் நல வாரியங்கள் மூலமாக தொழிலாளர்களுக்கு தமிழ்நாடு அரசு கரோனா நிவாரண நிதியை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இந்த நிவாரண நிதியை தொழிலாளர்களுக்கு வழங்காமல் தொழிலாளர் நல வாரியம் அலைக்கழித்துவருவதாகக் கூறி அதனைக் கண்டித்து கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டமானது ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது.

மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில் உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை ஓய்வூதியம் வழங்குவதைக் கண்டித்தும், மாதம்தோறும் முறையாக ஓய்வூதியம் வழங்க வேண்டும் எனவும், நலவாரியத்தில் பதிவுசெய்துள்ள அனைத்து தொழிலாளர்களுக்கும் கரோனோ நிவாரண நிதியுதவி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

ABOUT THE AUTHOR

...view details