தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஒன்றியம் வடக்கு திட்டங்குளம், ஆவல் நத்தம் கிராமங்களில், அம்மா மினி கிளினிக் திறந்துவைத்தல், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், மூப்பன்பட்டியில் அம்மா நகரும் நியாயவிலைக் கடையினை தொடங்கிவைத்தல், 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் வாறுகால் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜா கலந்துகொண்டு பணிகளைத் தொடங்கிவைத்தார்.
கோவில்பட்டியில் 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப்பணிகள் தொடங்கிவைப்பு - தூத்துக்குடியில் கடம்பூர் ராஜா புது திட்டப் பணிகளை தொடங்கியுள்ளார்
தூத்துக்குடி: கோவில்பட்டி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கிவைத்தார்.
புதுத் திட்ட பணிகள் துவங்கிவைப்பு
நிகழ்ச்சியில் ஒட்டப்பிடாரம் முன்னாள் எம்எல்ஏ மோகன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர் மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க: எம்ஜிஆர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் இதுதான் முதல்முறை: தடம்பதிக்கும் மோடி!