இந்தப் போட்டிகளை கபடி கழக தலைவர் திருச்செந்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார். ஆண்கள் பிரிவில் 12 அணிகளும், பெண்கள் பிரிவில் ஐந்து அணிகளும் எனப் இப்போட்டிகள் நடைபெற்றன. மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இப்போட்டியில், பெண்கள் பிரிவில் தூத்துக்குடி - ஓட்டப்பிடாரம் அணிகள் 60 - 17 புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது.
தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி : அமச்சூர் கபடி கழகம் சார்பில் 47ஆவது ஆண்கள், பெண்கள், ஜூனியர் அளவிலான கபடி சாம்பியன்ஷிப் போட்டி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்றது.
![தூத்துக்குடியில் மாவட்ட அளவிலான கபடி போட்டி amature_kabadi_competition](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10538581-519-10538581-1612716338293.jpg)
amature_kabadi_competition
ஆண்கள் பிரிவில் இறுதிப் போட்டிக்கு கருங்குளம் அணியும், விளாத்திகுளம் அணிகள் மோதின. இதில் விளாத்திகுளம் அணி 25-16 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. வெற்றி பெற்ற அணிகளுக்கு தூத்துக்குடி மாவட்டம் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கோப்பைகளை வழங்கினார்.
மாவட்ட அளவில் நடைப்பெற்ற கபடி போட்டி
இதையும் படிங்க:குரும்பா சமூகத்தை பழங்குடியின பட்டியலில் சேர்க்க கோரிக்கை