தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காளாம்பட்டியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. 1961ஆம் ஆண்டு தொடக்கப் பள்ளியாக இருந்த இப்பள்ளியில் 1963-64 கல்வியாண்டு முதல் 1974-75 கல்வியாண்டு வரை பயின்ற மாணவர்கள் சந்தித்துக் கொண்டனர்.
தமிழ்நாடு உட்பட வெளிநாடுகளில் வசித்துவரும் நண்பர்களை வாட்ஸ்அப் மூலம் சிரமப்பட்டு தொடர்பு கொண்டு இந்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னாள் மாணவர்கள் தங்களுக்கு பாடம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களையும் அழைத்து அவர்களையும் இந்த இவ்விழாவில் கௌரவப்படுத்தினர்.
75 வயதுடைய முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் 50 ஆண்டுகளுக்குப் முன்பு அப்பள்ளியில் படித்த 140 முன்னாள் மாணவர்கள் கலந்துகொண்டனர். அப்போது தங்கள் பள்ளிப் பருவ நண்பர்களைக் கண்டதும் நெகிழ்ச்சியுடன் கட்டியணைத்து அன்பை பரிமாறிக்கொண்டனர். மேலும் பள்ளி நாட்களில் நடைபெற்ற மறக்க முடியாத சம்பவங்கள் குறித்தும், தாங்கள் செய்த சேட்டைகள் குறித்தும் அவர்களின் நண்பர்களுடன் அந்த பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்கள்.
உறவினர்களின் சந்திப்பைவிட நண்பர்களின் சந்திப்பு எப்போதும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் அந்த தனி மகிழ்ச்சி தற்போது 60 வயது முதல் 75 வயதைக் கடந்த நண்பர்கள் சந்திப்பிலும் காண முடிந்ததாக கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.
இதையும் படியுங்க:'96' பட பாணியில் 50ஆண்டுகள் கழித்து சந்தித்த முன்னாள் மாணவர்களின் நெகிழ்ச்சியான சந்திப்பு!