தூத்துக்குடி: ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற இருக்கும் ஒலிம்பிக் போட்டியில் இந்திய அணி பங்கேற்கின்றனர். இதில் இந்திய ஹாக்கி வீரர்கள் தங்கப்பதக்கம் வெல்ல ஊக்குவிக்கும் விதமாக கோவில்பட்டியில் மாவட்ட ஹாக்கி கழகம் சார்பில் ஹாக்கி வீரர்கள் பேரணி சென்றனர்.
கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முன்புள்ள காவல்துறை மைதானத்திலிருந்து 100-க்கும் மேற்பட்ட இளம் ஆண், பெண் ஹாக்கி வீரர்கள் பேரணியாக கோவில்பட்டி எட்டயபுரம் சாலை, பழனியாண்டவர் கோவில் சாலை, கடலையூர் சாலை, புது ரோடு வழியாக காவல்துறை மைதானத்தில் பேரணியை நிறைவு செய்தனர்.