தூத்துக்குடி மாவட்டத்தின் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றான குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் தசரா திருவிழாவிற்கு காளி வேடம் அணியும் பக்தர்கள் கோயிலின் பத்தாம் திருவிழா நடைபெறும் நாளன்று தரிசனத்திற்கு தகுந்த இடைவெளியுடன் அனுமதி வழங்கக் கேட்டும் மேலும் உள்ளூரில் சப்பர பவனி அனுமதிம் கேட்டு மாவட்ட ஆட்சியகரத்திற்கு இந்து முன்னணியினர் மனு அளிக்க வந்திருந்தனர்.
இந்து முன்னணியினர் போலீஸாரிடம் கடும் வாக்குவாதம்!
தூத்துக்குடி: மதரீதியான கருத்துகள் கூறி தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காவல் துறையினரிடம் இந்து முன்னணி நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
hindu munnani
அப்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் நான்கு நபர்கள் மட்டுமே உள்ளே செல்ல அனுமதி வழங்கப்படும் எனக் கூறினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த இந்து முன்னணி நிர்வாகிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து இந்து முன்னணி நிர்வாகிகள் ஐந்து பேர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர்.