தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'தூத்துக்குடியில் மழை சேதங்களைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை' - தூத்துக்குடி கன மழை

தூத்துக்குடி: மாவட்டத்தில் மழை சேதங்களைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அம்மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கன மழை
தூத்துக்குடி கன மழை

By

Published : Nov 17, 2020, 3:44 PM IST

தூத்துக்குடி கோவில்பட்டி பகுதியில் மழைநீர் தேங்கியுள்ள பகுதிகளை தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆய்வுசெய்தார். கோவில்பட்டி மார்க்கெட் ரோடு, இலுப்பையூரணி பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வுமேற்கொண்டார்.

மார்க்கெட் சாலையில் ஆய்வு செய்தபோது பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் தினசரி சந்தை சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் பால்ராஜ், ‌ மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, ‌ தினசரி சந்தைக்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தி தரவும், மழைநீர் தினசரி சந்தைக்குள் வரமால் இருக்கவும் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று கோரிக்கைவைத்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், “வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்துள்ளது. கோவில்பட்டி பகுதியில் மழை பாதிப்புகளைத் தடுக்க செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ச.கோவில்பட்டி மார்க்கெட் பகுதியில் தண்ணீர் தேங்கிய பகுதியை ஆய்வுசெய்து, மழைநீர் தேங்காமல் இருப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தொடர்ச்சியாக மழை பெய்தால் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

மழை காலங்களில் தொற்று நோய்கள் வர வாய்ப்பு இருப்பதால் பொதுமக்கள் குடிநீரை சூடு செய்து குடிக்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் தொற்றுநோய்கள் ஏற்படமால் இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதியில் 42 பம்ப் மூலமாக தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றி பக்கிங் கால்வாய் வழியாக வெளியேற்றப்பட்டுவருகிறது. பம்ப் மூலமாக எடுக்க முடியாத இடங்களில் ஆறு லாரிகளை கொண்டு மழைநீரை அகற்றிவருகிறோம். மேலும் 120 பம்புகள் தயார் நிலையில் உள்ளன.

கோவில்பட்டி நகரில் பழமையான, இடியும் நிலையில் உள்ள கட்டடங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுவருகிறது. அப்பகுதிகளில் எவ்வித பாதிப்பு ஏற்படாமல் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details