தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிக அளவிலான சரக்கு பெட்டகங்கள்: தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை!

தூத்துக்குடி: சிதம்பரனார் துறைமுகம் கடந்த நிதியாண்டு கையாண்ட 6.97 லட்சம் அளவு சரக்கு பெட்டகங்களை விட இந்த நிதியாண்டில் 7.03 லட்சம் அதிகளவு பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.

தூத்துக்குடி துறைமுகம்

By

Published : Mar 16, 2019, 11:31 PM IST

இது குறித்து வ.உ.சிதம்பரனார் துறைமுகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது,

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள மிக முக்கியமான பொருளாதார இயந்திரமாக செயல்பட்டு வரும் வ.உ.சிதம்பரனார் துறைமுகம். இது கடந்த நிதியாண்டு கையாண்ட 6.97 லட்சம் அளவு டிஇயு சரக்கு பெட்டகங்களை விட இந்த நிதியாண்டில் அதிகளவு பெற்று புதிய சாதனை படைத்துள்ளது.இச்சாதனையானது இந்த நிதியாண்டில் 18 நாட்களுக்கு முன்பாகவே நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த நிதியாண்டு கையாண்ட சரக்கு பெட்டகங்களை ஒப்பிடுகையில் 15.03.2019 வரை வ.உ.சிதம்பரனார் துறைமுகம் 7.03 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாண்டு 6.44 விழுக்காடு வளர்ச்சி அடைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் இந்திய பெருந்துறைமுகங்களில் சரக்கு பெட்டகம் கையாளுவதில் வ.உ.சிதம்பனரார் துறைமுகம் மூன்றாம் இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுபோன்ற பல சாதனைகளைப் தொடர்ந்து நிகழ்த்த வேண்டும்.

இந்திய கப்பல்துறை அமைச்சகம் 2018-19ம் நிதியாண்டுநிர்ணயித்துள்ள 7.67 இலட்சம் டிஇயு சரக்கு பெட்டகங்களை கையாளுவதற்கு அனைவரும் அயராது உழைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details