தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடி சதுப்புநில பகுதிகளில் வெளிநாட்டுப் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு

தூத்துக்குடி சதுப்புநில பகுதிகளில் நடைபெற்ற வெளிநாட்டுப் பறவைகள் குறித்த கணக்கெடுக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வனத்துறை அலுவலர் அபிஷேக் தாமோர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.

தூத்துக்குடி சதுப்புநிலம்
தூத்துக்குடி சதுப்புநிலம்

By

Published : Jan 30, 2022, 9:45 AM IST

தூத்துக்குடி:தூத்துக்குடி மாவட்டம் முள்ளக்காடு முதல் வேம்பார் வரையிலான கடற்கரை பகுதிகள், உப்பள பகுதிகள் மற்றும் சதுப்பு நிலப்பகுதிகளில் ஆண்டுதோறும் ஜனவரி மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை பல வெளிநாட்டுப் பறவைகள் வருகை தருவது வழக்கம். குறிப்பாக சீனா, நைஜீரியா, ரஷ்யா, கஜகஸ்தான் ஆஸ்திரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலிருந்து பூநாரை, பெருங்கண்ணி , பவளக்கால் நாரை, வாத்து இனங்கள் என ஆயிரக்கணக்கான பறவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் பயணம் செய்து தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வருகை தருகின்றன.

கடற்கரை உப்பளங்கள், சதுப்புநில பகுதிகளில் இருக்கக்கூடிய உயிரினங்களை உணவாக உட்கொள்வதற்கும், இனப்பெருக்கம் செய்வதற்கும் இந்த பறவைகள் இங்கு வருவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு தூத்துக்குடி மாவட்ட வனத்துறை மற்றும் பறவைகள் குறித்த ஆராய்ச்சி மேற்கொண்டு வரும் தொண்டு நிறுவனம் சார்பில் இரண்டு நாட்கள் (ஜன.28,29) நடைபெற்றது.

தூத்துக்குடி சதுப்புநில பகுதிகளில் வெளிநாட்டு பறவைகள் குறித்த கணக்கெடுப்பு

இந்த கணக்கெடுப்பு பணிகளை நேற்று (ஜன.29) திருநெல்வேலி களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனப் பாதுகாவலர் செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், தூத்துக்குடி மாவட்ட வனத்துறை அலுவலர் அபிஷேக் தாமோர் ஆகியோர் நேரில் பார்வையிட்டனர்.

தூத்துக்குடி சதுப்புநிலம்

கணக்கெடுப்பு பணிகளில் 150க்கும் மேற்பட்ட பணியாளர்கள் ஈடுபட்டிருந்தனர். கணக்கெடுப்பின் மூலம் தூத்துக்குடிக்கு வெளிநாடுகளிலிருந்து எவ்வளவு பறவைகள் வந்துள்ளன, என்னென்ன பறவைகள் வந்துள்ளன எனத் தெரியவரும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: இந்து- இஸ்லாமியர்களை விடுதலை போரில் இணைத்த டெல்லி ஜாமியா பள்ளிவாசல்!

ABOUT THE AUTHOR

...view details