தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி தாலுக்கா அலுவலகம் அருகே உள்ள இ.எஸ்.ஐ. மருந்தக ஊழியர்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அங்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு மருந்தகம் மூடப்பட்டது. இதே போல், எட்டயபுரம் சாலையில் உள்ள எச்டிஎஃப்சி தனியார் வங்கி ஊழியர் ஒருவருக்கு கரோனா தொற்று காரணமாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூன்று நாட்களுக்கு வங்கி மூடப்பட்டது.
இந்நிலையில், ஒரே நாளில் கோவில்பட்டி பகுதியில் 26 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து, அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கோவில்பட்டி நகராட்சி ஆணையர் ராஜாராம் உத்தரவின்படி, சுகாதாரத் துறை ஆய்வாளர் சுரேஷ் மற்றும் நகராட்சி தூய்மைப் பணியாளர்கள் விரைந்து சென்று கிருமி நாசினி மருந்து தெளித்தனர்.