தூத்துக்குடி கடல் பகுதியில், 100 கிலோ ஹெராயின் போதை பொருள், 5 துப்பாக்கிகளுடன் இலங்கை பதிவெண் கொண்ட படகு பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் படகிலிருந்த 6 பேர் இந்திய கடலோர காவல் படையினரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பாக மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில், குற்றவாளிகள் 6 பேரும் தூத்துக்குடி இரண்டாம் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி உமாதேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். அதில் நீதிபதி, சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.