தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கோடை காலத்திற்கு முன்பாகவே குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி 51ஆவது வார்டுக்குட்பட்ட ஊரணி ஒத்தவீடு பகுதியில் 250-க்கும் மேற்பட்டோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக அலுவலர்கள், முன் தொகையை வசூல் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதைத் தொடர்ந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் ஏமாற்றம் அடைந்த பொதுமக்கள் இன்று தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்து நேரில் வந்த தூத்துக்குடி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கீதா ஜீவன் மாநகராட்சி ஆணையரை சந்தித்து பேசினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "ஊரணி ஒத்தவீடு பகுதியில் வசிக்கும் குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்குவதற்கு அலுவலர்கள் வைப்புத் தொகையை வசூலித்துள்ளனர்.