தமிழ்நாடு

tamil nadu

மனுநீதி நாள் முகாமில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய தூத்துக்குடி கலெக்டர்

தூத்துக்குடி: குளத்தூரில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வழங்கினார்.

By

Published : Mar 11, 2020, 11:38 PM IST

Published : Mar 11, 2020, 11:38 PM IST

Thoothukudi Collector who provided welfare assistance to people
Thoothukudi Collector who provided welfare assistance to people

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், வேம்பார், சிவஞானபுரம், குளத்தூர் ஆகிய குறுவட்டத்திற்கு உட்பட்ட வருவாய் கிராமப் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கடந்த 23ஆம் தேதி முன்னோடி மனுநீதி நாள் முகாம் நடைபெற்றது. இவற்றில் பொதுமக்களிடமிருந்து முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற கோரிக்கைகள் அடங்கிய 553 மனுக்கள் பெறப்பட்டு, 166 மனுக்கள் ஏற்கப்பட்டன.

பின்னர் அதற்கான மனுநீதி நாள் முகாம் குளத்தூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. முகாமிற்கு, மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்துரி தலைமை வகித்தார். முகாமில் பயனாளிகளுக்கு ரூ. 33.85 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர்

விளாத்திகுளம் ஒன்றிய சேர்மன் முனியசக்தி ராமசந்திரன், மாவட்ட கவுன்சிலர் நடராஜன், கோவில்பட்டி ஆர்.டி.ஓ. விஜயா, விளாத்திகுளம் பி.டி.ஓ. தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதையும் படிங்க: ஆற்றில் இறந்த ஆடு மாடுகளின் கழிவு - மாவட்ட ஆட்சியரிடம் புகார்!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details