தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.
முன்னதாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் வைரஸ் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. கடந்த சில நாள்களுக்கு முன்னர் தூத்துக்குடி துறைமுகம் வந்த சீன கப்பலில் இருந்த மாலுமிகளால் தூத்துக்குடியில் கொரோனா வைரஸ் காய்ச்சல் பரவ வாய்ப்புள்ளதாக வந்த தகவல் முற்றிலும் தவறானது. தூத்துக்குடி வந்த சீன மாலுமிகள் கப்பலை விட்டு தரையிறங்குவதற்கு அனுமதிக்கப்படவில்லை. அவர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே கப்பலானது துறைமுகம் வருவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.