தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நோய் கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, பரிசோதனை முகாமை மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, பரிசோதனை நடைபெறும் இடங்களில் எத்தனை நபர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்கிற விவரங்களை சேகரித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் கரோனா தடுப்பு பணியில் தூத்துக்குடி மாவட்டம் அதிக கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் காணொலி காட்சி மூலம் உரையாற்றும் போது, மாவட்டத்தில் பரிசோதனைகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்தக் கூறினார். அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இரண்டாயிரமாக இருந்த பரிசோதனைகளின் எண்ணிக்கை தற்போது இரண்டாயிரத்து 300ஆக உயர்ந்துள்ளது.