தூத்துக்குடி:முறப்பநாட்டில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்த லூர்து பிரான்சிஸ், நேற்று (ஏப்ரல் 25) அவரது அலுவலகத்தில் பணியில் இருக்கும்போதே வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து, அவரது உடல் திருநெல்வேலி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன் பின்னர், அவரது உடல் சொந்த ஊரான தூத்துக்குடி அருகே உள்ள சூசை பாண்டியபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் அஞ்சலிக்கு பின், இறுதிச் சடங்கு நடைபெற்றது. இந்த இறுதிச் சடங்கில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ், உயிரிழந்த லூர்து பிரான்சிஸ் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். இதனிடையே, இந்த கொலை சம்பவத்தைக் கண்டித்து கிராம நிர்வாக அலுவலர்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.