தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் தரை தட்டிய பார்ஜ் கப்பல்: விசைப்படகுகள் மூலம் மீட்பு - மீனவ பெண்கள் உற்சாகாம்

தூத்துக்குடியிலிருந்து சரக்கு கொண்டுசெல்லும் பார்ஜ் என்னும் பெரிய வகை கப்பல் நேற்று தரை தட்டியது, மூன்று விசைப்படகு கொண்டு மீட்கப்பட்டது.

thoothukudi barjee ship  grounded ship rescued  three speed-boat helps the ship  தூத்துக்குடி பார்ஜ் கப்பல்  விசை படகு மூலம் மீட்பு  மீனவ பெண்கள் உற்சாகாம்  தூத்துக்குடி பார்ஜ் கப்பல்
தூத்துக்குடி கப்பல்

By

Published : Dec 14, 2021, 3:06 PM IST

தூத்துக்குடி:தூத்துக்குடியிலிருந்து மாலத்தீவு, கொழும்பு உள்ளிட்ட சில பகுதிகளுக்கு ஜல்லி பாறை கற்கள் போன்ற சரக்குகளைக் கொண்டுசெல்வதற்காக பார்ஜ் எனப்படும் பெரிய வகை கப்பல் இயக்கப்பட்டுவருகிறது. இது சுமார் ஆயிரக்கணக்கான டன் எடையுள்ளது.

இந்தக் கப்பலானது நேற்று (டிசம்பர் 13) மாலத்தீவில் சரக்குகளை இறக்கிவிட்டு தூத்துக்குடிக்குத் திரும்பிச் சென்றது. தூத்துக்குடி பழைய துறைமுகத்திற்கு அருகில் வந்துகொண்டிருக்கும்போது, இழுவைக் கப்பலின் மூலம் துறைமுகத்திற்கு உள்ளே இழுத்துச் செல்ல கொண்டுவர முயன்றனர். அந்த வேளையில் கடல் சீற்றத்தாலும், அதிக காற்று வீசியதாலும் பார்ஜில் கப்பலில் கட்டியிருக்கும் கயிறு அறுந்து விழுந்தது.

மீட்புப்பணி

இதனால் காற்றின் போக்கில் இழுத்துச் செல்லப்பட்ட பார்ஜி கப்பல் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு அருகே உள்ள இனிகோ நகர் பகுதியில் நேற்று தரை தட்டியது.

இதனைத் தொடர்ந்து இன்று காலை 3 மீன்பிடி விசைப் படகுகளின் மூலம் கயிறுகளைக் கட்டி சுமார் 2 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெரிய வகை பார்ஜ் ஆழ்கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டு மீண்டும் பழைய துறைமுகத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

மீனவப் பெண்கள் உற்சாகம்

அப்போது அங்கிருந்த அப்பகுதி மீனவப் பெண்கள் கப்பல் கடலுக்குள் செல்லும்வரை காத்திருந்து மீட்புப் பணி முடிந்ததும் உற்சாகத்துடன் கையசைத்து வழியனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க:கொள்ளிடம் ஆற்றில் சிக்கி தவித்த 60 மாடுகள் மீட்பு

ABOUT THE AUTHOR

...view details