தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

தூத்துக்குடியில் ரூ. 196 கோடி மதிப்பில் புதிய உள்நாட்டு பயணிகள் முனையம்!

தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக ரூ. 196 கோடி மதிப்பில் உள்நாட்டு பயணிகள் முனையம் கட்டுமான பணிகள் இன்று தொடங்கப்பட்டது.

பயணிகள் முனையம்
பயணிகள் முனையம்

By

Published : Oct 21, 2021, 8:46 PM IST

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து சென்னை, பெங்களூரு பகுதிகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தும் நடவடிக்கைகள் கடந்த சில ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக 600 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதற்காக விமான ஓடுபாதை 10 இடங்களில் நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போதுள்ள பயணிகள் முனையம் 80 பயணிகள் மட்டுமே வந்து செல்ல ஏதுவாக உள்ளது. புதிதாக 10 ஆயிரத்து 800 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய உள்நாட்டு பயணிகள் முனையம் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று (அக்.21) நடைபெற்றது.

உள்நாட்டு பயணிகள் முனையம் கட்டுமான பணிகள்

ரூ. 196 கோடி மதிப்பில் கட்டப்படவுள்ள இந்த உள்நாட்டு பயணிகள் முனையத்தில் ஏடிசி டவர் தொழில்நுட்ப பிரிவு, தீயணைப்புப் பிரிவு உள்ளிட்டவைகள் அமைக்கப்படும். இதற்கான கட்டுமான பணியை இந்திய விமான நிலைய ஆணைய செயல் இயக்குநர் ஆர்.மாதவன் தொடங்கி வைத்தார்.

உள்நாட்டு பயணிகள் முனையம் கட்டுமான பணிகள்

இந்நிகழ்ச்சியில் தூத்துக்குடி விமான நிலைய இயக்குநர் என்.சுப்பிரமணியன், மேலாளர் ஜெயராமன், பொதுமேலாளர் சுப்ரவேலு, தூத்துக்குடி வ.உ.சி துறைமுகம் மக்கள் தொடர்பு அலுவலர் சசிகுமார் கலந்து கொண்டனர்.

உள்நாட்டு பயணிகள் முனையம் கட்டுமான பணிகள்

இதையும் படிங்க: முதுகலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க கால நீட்டிப்பு!

ABOUT THE AUTHOR

...view details