தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புத்தூர் தேசிய நெடுஞ்சாலையில், மதுரையை நோக்கிச் சென்ற இருசக்கர வாகனம் ஒன்று சாலையின் தடுப்பு சுவரில் மோதியது.
தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் மோதி இளைஞர் உயிரிழப்பு! - தூத்துக்குடி மாவட்ட செய்திகள்
தூத்துக்குடி : கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலை தடுப்பு சுவரில் இருச்சக்கர வாகனம் மோதி இளைஞர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Thoothukudi accident News
இதில், ஜெர்விஷ் டோனி (வயது 20) என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மற்றொரு நபரான சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த இளைஞர் யுவராஜ் (வயது 22) பலத்த காயங்களுடன் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்துச்சென்ற காவல் துறையினர், ஜெர்விஷ் டோனியின் உடலைக் கைப்பற்றி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம், குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.