தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வரும் விசைப்படகு மீனவர்கள் இன்று திடீர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின்போது உதவி மீன்வளத் துறை இயக்குநர் அலுவலகம், இணை இயக்குநர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்ட முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து, மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திராவைச் சந்தித்து விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் கோரிக்கை மனு அளித்தனர்.
பின்னர், ஒருங்கிணைந்த அனைத்து விசைப்படகு உரிமையாளர்கள் கூட்டமைப்பு துணைச்செயலாளர் ஜான் போஸ்கோ செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அதில், "தூத்துக்குடி துறைமுகத்தை தங்கு தளமாகக் கொண்டு 260க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இவர்களுக்கு ஆழ்கடலில் தங்கி மீன்பிடித் தொழில் செய்ய மீன்வளத்துறை அனுமதிப்பதில்லை. ஆனால், தமிழ்நாட்டின் பிற கடற்கரை மாவட்டங்களில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.