ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் சண்முகையாவை ஆதரித்து இரண்டாம் கட்டமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று மாலை இத்தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். வல்லநாடு, தெய்வச்செயல்புரம், அக்காநாயக்கன்பட்டி பரிவல்லிக்கோட்டை ஆகிய பகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஸ்டாலின் தங்கும் ரிசார்ட்டில் சோதனை! - dmk leader mk.stalin
தூத்துக்குடி: திமுக தலைவர் ஸ்டாலின் தங்கவிருக்கும் சத்யா ரிசார்ட்டில் பறக்கும்படை அலுவலர்கள் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி
இந்நிலையில், அவர் வழக்கமாக தங்கும் தூத்துக்குடி - நெல்லை நெடுஞ்சாலையில் உள்ள சத்யா ரிசார்ட்டில் 10-க்கும் மேற்பட்ட தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹோட்டலில் நிறுத்தப்பட்டிருந்த திமுகவினரின் கார்களிலும் பறக்கும்படை அலுவலர்கள் சோதனை மேற்கொண்டனர். ஒரு மணி நேரம் வரை இச்சோதனை நீடித்தது.