விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், சிதம்பரம் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தூத்துக்குடியில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று (செப். 5) மாலை தூத்துக்குடி விமான நிலையம் வந்தடைந்தார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது; கல்வி தொடர்பான அதிகாரத்தை பொதுப் பட்டியலில் இருந்து மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். மாநில அரசுகளின் அதிகாரத்தையும், உரிமைகளையும் கல்வி தளத்தில் பாதுகாக்கக் கூடிய வகையில் அது அமையும்.
எனவே ஒத்திசைவு பட்டியலிலிருந்து மாநில அரசுக்கான பட்டியலில் மாநில அரசுக்கான அதிகாரத்தை மாற்ற வேண்டும் என்று மத்திய அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கோரிக்கை வைக்கிறோம் என்று தொடங்கிய அவர், தமிழக அரசு இன்றைக்கு மாதிரி பள்ளிகள் என்று புது தில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் அவர்களைக் கொண்டு திறந்து வைத்திருக்கிறது வரலாற்று சிறப்பு வாய்ந்த ஒரு முயற்சி, தமிழகத்தில் உள்ள பள்ளிகள் அனைத்தும் மிக சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட வேண்டும்.
மாணவர்களின் தேவைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட வேண்டும். தனியார் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் செல்லுவது தடுக்கப்படவேண்டும். அரசு பள்ளிகளில் படித்தால் நல்லது என்கிற உணர்வு பெறக்கூடிய வகையிலே பள்ளிகளின் கட்டமைப்பு ஆசிரியர்களின் திறன் மேம்பாடு அமைய வேண்டும். அதற்கான ஒரு முயற்சியாக இன்றைக்கு முதல்வர் மாதிரி பள்ளிகளை உருவாக்கியிருக்கிறார். அதனை திறந்தும் வைத்திருக்கிறார் என்பதை அறிந்து மகிழ்ச்சி, அது மேலும் பரவலாக கட்டமைக்கப்பட வேண்டும்.
டிஇடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற ஏராளமான பட்டதாரிகள் வேலை வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்கள். பள்ளி, ஆசிரியர் நியமனங்களில் டிஇடி தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுக்கிறோம். டிஆர்பி தேர்வில் இப்போது முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதில் சில மாணவர்கள் தமிழ் வழியில் பயின்ற நிலையிலும், சான்றுகளை சமர்ப்பிக்க இயலாத நிலை ஏற்பட்டிருக்கிறது.
அவர்கள் தங்களுடைய பெயர் தகுதி பட்டியலில் அல்லது தேர்ச்சி பட்டியலில் இடம்பெறவில்லை என்று முறையூட்டு இருக்கிறார் அதனை அரசு அங்கீகரிக்க வகையில் அவ்வாறு விடுபட்டு போன அல்லது தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் அதை முறையாக சமர்ப்பிக்க இயலாத நிலையை அவர்களுக்கு வாய்ப்பு அளிக்க கூடிய வகையில் அரசு முடிவு எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்.
பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீடு, சமூகநீதிக்கு எதிரான ஒரு நிலைப்பாடு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஒரு நிலைப்பாடு அதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விடுதலைச்சிறுத்தைகள் தொடுத்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது. சுப்பிரமணிய சுவாமி அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள சோசலிசம், மற்றும் செக்யூலரிஸம் என்ற இரண்டு சொற்களை நீக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
பாரதிய ஜனதா மற்றும் ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட சங்பரிவார் அமைப்புகளின் நோக்கம், நடைமுறையில் இருக்கிற அரசியலமைப்புச் சட்டத்தை தூக்கி எறிவது என்பது தான். அதற்கு ஒரு சான்றுதான் சுப்பிரமணிய சுவாமி உச்சநீதிமன்றத்தில் தொடுத்த வழக்கு அமைந்துள்ளது. இந்த வழக்கில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையுடு மனுவைத் தாக்கல் செய்யலாம் என்று முடிவெடுத்து தாக்கல் செய்ய இருக்கிறோம். அந்த வழக்கை சுப்ரமணியசாமி திரும்பப் பெற வேண்டும் என்று பாஜக தலைமை அறிவுறுத்த வேண்டும்.
அதேபோல உத்திரப் பிரதேசத்தில் 30 சாமியார்கள் ஒன்றுகூடி 700 பக்கத்தில் புதிய அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை எழுதி இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன, அந்த அரசமைப்புச் சட்டத்தின்படி 30 பக்கம் மட்டும் அந்த அரசியலைமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வரும் என்றும், அப்படி வந்தால் இந்தியாவின் தலைநகரம் உறுதியாக இருக்காது வாரணாசி தான், இந்தியாவின் ஆட்சி நிர்வாகம் ஜனநாயக முறைப்படி இருக்காது.