அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடானது திருச்செந்தூர் முருகன் கோயில். இங்கு நடைபெறும் மிக முக்கிய விழாக்களில் ஒன்று கந்தசஷ்டி திருவிழா. இவ்விழாவானது இன்று அதிகாலையில் யாகசாலை பூஜையுடன் கோலாகலமாகத் தொடங்கியது.
சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.