தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கோவில்பட்டியில் 15 பவுன் நகை; 2 லட்சம் ரூபாய் கொள்ளை - கொள்ளையர்கள் அட்டகாசம் - kovilpatti,theft,vis,script

கோவில்பட்டியில் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேர்கொண்டு வருகின்றனர்.

tn_tut_02_kovilpatti_theft_vis_script_TN10058
tn_tut_02_kovilpatti_theft_vis_script_TN10058

By

Published : Jul 16, 2021, 7:58 PM IST

தூத்துக்குடி: கோவில்பட்டியில் 15 பவுன் நகை, 2 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இது தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோபால் செட்டி தெருவைச் சேர்ந்த வெயிலு முத்து, அவரது மனைவி பேச்சியம்மாள், பேரன் சுதர்சன் ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். இன்று அதிகாலை மூன்று மணிக்கு முகமூடி அணிந்த சிலர் வீட்டின் காம்பவுண்ட் சுவரை தாண்டி வீட்டுக்குள் புகுந்து பேச்சியம்மாள் கழுத்தில் கிடந்த 13 பவுன் தங்க நகை, பேரன் கழுத்தில் கிடந்த 2 பவுன் செயின் மற்றும் பீரோவில் இருந்த இரண்டு லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த கோவில்பட்டி டிஎஸ்பி உதயசூரியன், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் சபாபதி. மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி முகமூடி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். மேலும், தூத்துக்குடியிலிருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது. இச்சம்பவம் கோவில்பட்டியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: எம்எல்ஏ சீட் வாங்கித் தருவதாக ரூ.50 லட்சம் மோசடி: நால்வர் மீது வழக்குப்பதிவு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details