தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

துணை மின் நிலையத்தில் ரூ.14.92 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் திருட்டு - 3 பேர் கைது - துணை மின் நிலையம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் ரூ. 14.92 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர், அலுமினிய பொருள்களை திருடிய மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

திருட்டு
திருட்டு

By

Published : Feb 12, 2023, 10:16 AM IST

தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே மேலலட்சுமிபுரம் பகுதியில் தமிழ்நாடு அரசு மின் தொடர் அமைப்பு கழகத்திற்கு, துணை மின் நிலையம் அமைக்கும் பணியை எல் அண்ட் டி தனியார் நிறுவனத்தினர் மேற்கொண்டு வருகின்றனர். இந்த துணை மின் நிலைய பணிகளுக்காக காப்பர் வயர்கள் மற்றும் அலுமினிய பொருள்களாலான மின் இணைப்பு கிளாம்புகளும் வைக்கப்பட்டிருந்தது.

இந்த பொருள்களை பிப்ரவரி 9ஆம் தேதி அன்று தனியார் நிறுவன அதிகாரிகள் சரிபார்த்த போது அதில் காப்பர் வயர்கள் மற்றும் அலுமினிய மின் இணைப்பு கிளாம்புகளும் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து எல்அண்ட்டி நிறுவனத்தில் நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வரும் வேல்முருகன் (42) ஓட்டப்பிடாரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகரின் பேரில் ஓட்டப்பிடாரம் போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இது தொடர்பாக சந்தேகத்தின் பெயரில் கீழவேலாயுதபுரம் கிராமத்தைச் சேர்ந்த சஞ்சய்சிங் என்கிற மணி (39), வேல்முருகன்(28), துரைச்செல்வம் (22) ஆகியோரை ஓட்டப்பிடாரம் காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை செய்தனர்.

அதில், துணை மின் நிலையத்தில் காப்பர் வயர் மற்றும் அலுமினிய மின் இணைப்பு கிளாம்புகளை திருடியதை ஒப்புக்கொண்டனர். இதில் ஐந்து நபர்களுக்கு தொடர்பு இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து மூவரையும் கைது செய்து அவர்களிடமிருந்து 14.92 லட்சம் மதிப்புள்ள காப்பர் வயர்கள் மற்றும் அலுமினிய மின் இணைப்பு கிளாம்புகளை பறிமுதல் செய்தனர். அவர்களிடம் இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சம்பவத்தில் தொடர்புடைய ஐந்து நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: வீட்டை உடைத்து பணம் திருட்டு - சிறுவர்கள் கைது

ABOUT THE AUTHOR

...view details