தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே கயத்தாறு, சால்நாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் எபிலாதேவி. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரும் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் பாலமுருகன் தனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் செய்திருப்பதாகவும், அந்தப் பெண்ணையே திருமணம் செய்யப்போவதாகவும் கூறி எபிலாதேவியுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். எபிலாதேவி விவசாய குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பாலமுருகன் குடும்பத்தினர் வரதட்சணைக்காக வரும் 7ஆம் தேதி வேறொரு பெண்ணுடன் பாலமுருகனுக்கு திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளனர்.
இதனை அறிந்த எபிலாதேவி, கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கடம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பின்னர், பாலமுருகனை ஸ்டேஷன் ஜாமீனில் விடுவித்ததாக கூறப்படுகிறது.
காதலனுடன் சேர்த்து வைக்கக்கோரி இளம்பெண் தர்ணா இந்நிலையில், விரக்தியடைந்த எபிலாதேவி தன்னை காதலித்து ஏமாற்றிய பாலமுருகன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். 7ஆம் தேதி நடைபெற உள்ள திருமணத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கயத்தாறு வட்டாட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். பின்னர், வட்டாட்சியரிடம் கோரிக்கை மனுவை வழங்கினார். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து எபிலாதேவி அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.
இதையும் படிங்க:'கார் ஓட்டியவருக்கு ஹெல்மெட் இல்லை' என அபராதம் வசூலித்த இன்ஸ்பெக்டருக்கு ரூ.1 லட்சம் ஃபைன்!