தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் அருகேவுள்ள கிளாக்குளம் கிராமத்தில் கோயில் திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவை முன்னிட்டு கடைசி நாளில் இன்னிசை கச்சேரி நடத்தப்பட்டது. இந்த இன்னிசை கச்சேரியில் பாடும் பாடலுக்கு ஏற்ப அப்பகுதியைச்சேர்ந்த இளைஞர்கள் மேடையின் ஓரமாக நடனமாடிக்கொண்டிருந்தனர்.
இதனைக்கண்ட அங்கிருந்த முதியவர் ஒருவர், நானும் ‘மைக்கேல் ஜாக்சன்’ தான் என கூறி இளைஞர்களுடன் ஆடினார். இதனை வெகுநேரமாக பார்த்துக்கொண்டிருந்த அவருடைய மனைவி நேராக முதியவரிடம் சென்று, வடிவேலுவை கோவை சரளா பிரட்டி பிரட்டி எடுப்பதுபோல், முதியவரின் சட்டையைப்பிடித்து இழுத்து, கையை முறுக்கி முதுகில் கும்மாங்குத்து குத்தினார்.