தூத்துக்குடி: சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் பகுதியில் கனரா வங்கி மற்றும் அதனுடன் இணைந்த ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஏடிஎம்மில் கடந்த சில மாதங்களாக 100 மற்றும் 200 ரூபாய் பணம் வரவில்லை என பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.
மேலும் அவசர தேவைக்கு மெடிக்கல் மற்றும் மளிகை கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக பணம் எடுக்கும் வாடிக்கையாளர்கள் நூறு ரூபாய் இல்லாமல் தவித்து வந்துள்ளனர். இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த ஹென்றி என்ற வாலிபர் ஏடிஎம்முக்கு 100 ரூபாய் பணம் எடுக்க வந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஏடிஎம் இயந்திரத்தில் 100 ரூபாய் வராததால் அங்கு ஊழியர்களிடம் இது குறித்து கேட்க சென்றுள்ளார்.