தூத்துக்குடி:கோவில்பட்டி அருகே தொட்டம்பட்டியைச்சேர்ந்தவர், இளையராஜா மகள் ரதிமா (10). இவர் கோவில்பட்டி தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு பயின்று வருகிறார்.
இன்று வீட்டிலிருந்து வழக்கம்போல் பள்ளிக்கு புறப்பட்டுப்பள்ளி வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முடுக்களாங்குளம் வளைவு அருகே பள்ளி வாகனத்தின் அவசர காலக்கதவு தானாக திறந்ததில், கதவின் அருகே அமர்ந்திருந்த பள்ளி மாணவி ஓடிக்கொண்டிருந்த பள்ளி வாகனத்தில் இருந்து சாலையில் கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார்.