தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

'திரையுலகத்தின் கதாநாயகன் சட்டப்பேரவையில் இருக்கின்றார்'; கடம்பூர் ராஜூ - கடம்பூர் ராஜூ குற்றசாட்டு

திமுக ஆட்சியில் திரையுலகம் சுதந்திரமாக செயல்பட முடியாமல் அழிவு பாதையை நோக்கி செல்கின்றது என்று முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

திரையுலகத்தின் கதாநாயகன் சட்டமன்றத்தில் இருக்கின்றார்; கடம்பூர் ராஜூ குற்றசாட்டு
திரையுலகத்தின் கதாநாயகன் சட்டமன்றத்தில் இருக்கின்றார்; கடம்பூர் ராஜூ குற்றசாட்டு

By

Published : Jul 19, 2022, 5:16 PM IST

தூத்துக்குடி:விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறுகையில், தமிழ்நாட்டில் நடைபெறும் பிரச்சனைகளை பார்த்தால் இலங்கை போல் மாறும் சூழ்நிலை உள்ளது. அப்படி மாறும்பட்சத்தில் திமுக ஆட்சி விரட்டியடிக்கப்படும்.

அதிமுக-வின் கடந்த 5-ஆண்டு காலத்தில் சினிமா துறை சுதந்திரமாக இயங்கி வந்தது. அதைபோல் அதிமுக ஆட்சியில் 2017-ல் இருந்து தொடர்ந்து ஆண்டுக்கு இரண்டு திரைப்படங்கள் கோவாவில் நடைபெற்ற இண்டெர்நேஷனல் திரைப்பட விழாவில் சர்வதேச திரைப்படங்களுக்கு நிகராக தமிழ் திரைப்படங்கள் வெளியிடும் சூழ்நிலை இருந்தது.

கடம்பூர் ராஜூ

அதேபோல் அதிமுக ஆட்சியில் திரைப்படத்துறை சர்வதேச அளவில் தரம் உயர்ந்து காணப்பட்டது. ஆனால் இன்று தமிழ் திரையுலகத்தின் தரம் ரெட் ஜெயன் மூவியை சுற்றி காணப்படுகிறது. திரையுலகத்தின் கதாநாயகன் சட்டப்பேரவையில் இருக்கின்றார். அவரது கட்டுப்பாட்டில் தான் சினிமா துறை உள்ளது என்று திரையுலகமே குற்றம்சாட்டை முன் வைக்கிறது. தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் திரைத்துறை அழிவு பாதையை நோக்கி செல்கின்றது" என்று குற்றம் சாட்டினார்.

இதையும் படிங்க:பெரியார் பல்கலை. தேர்வில் சாதி குறித்த கேள்வி; ஒரு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் - அமைச்சர் பொன்முடி தகவல்!

ABOUT THE AUTHOR

...view details