தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகேவுள்ள அம்மா உணவகத்தில் அதிமுக சார்பில் கரோனா ஊரடங்கு காரணமாக, உணவின்றி தவித்து வரும் ஏழை மக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொதுமக்களுக்கு கொடுக்கப்படும் உணவு தரமானதாக உள்ளதா என்பதனை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர், தமிழ்நாட்டில் சுய ஊரடங்கின் போது யாரும் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அவர்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ரேசன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000 வழங்கப்பட்டது. மேலும் ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்கு ரேசன் கடைகளில் விலையில்லா பொருள்களையும் வழங்கி, அனைவருக்கும் அத்தியாவசியப் பொருள்கள் கிடைப்பதை தமிழ்நாடு முதலமைச்சர் உறுதி செய்துள்ளார்.
அம்மா உணவகங்கள் மக்களுக்கு பசி தீர்க்கும் மையங்களாக இருக்க வேண்டும் என்பதற்காக தான் குறைந்த விலையில் உணவு வழங்கி செயல்பட்டு வந்தது. தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக முதலமைச்சரின் உத்தரவுபடி அம்மா உணவகங்களில் அதிமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்களுக்கு சத்தான உணவு பொருட்களை வழங்கும் நோக்கில் தற்போது உணவுடன் முட்டையும் வழங்கப்பட்டு வருகிறது.
‘தமிழ்நாட்டி ஒருவர் கூட அவதிபடாத நிலையை உருவாக்க அரசு செயல்படுகிறது’ அதேசமயம் தமிழ்நாட்டில் ஒருவருக்கு கூட உணவோ, அத்தியாவசியப் பொருள்களோ கிடைக்காத நிலை இல்லை என்பதை உருவாக்க தமிழ்நாடு அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:நலமுடன் இருப்பவர்களுக்கு கரோனா பரிசோதனை எதற்கு? எதிர்க்கட்சியினருக்கு அமைச்சர் பதில்